Monday, 21 February 2011

IISc – 4 ஆண்டு B.S. படிப்பில் சேர

இந்தியாவில் மிக உயர்ந்த அறிவியல் கல்வி நிறுவனம் “இந்திய அறிவியல் கழகம்” எனப்படும் “IISC”. இது மத்திய அரசின் நிறுவனம், பெங்களூரில் மட்டுமே உள்ளது.
இந்த கல்வி நிறுவனத்தில் 4 ஆண்டு இளநிலை அறிவியல் (B.S) படிப்பிற்க்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
பணிரெண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் படித்த மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இங்கு விண்ணப்பிக்க IIT-JEE, AIEEE, AIPMT தேர்வில் ஏதாவது ஒன்றை எழுதி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
பயிற்றுவிக்கப்படும் படிப்புகள்
B.S (MATHEMATICS)
B.S. (PHYSICS)
B.S (CHEMISTRY)
B.S (BIOLOGY)
B.S. (MATERIALS)
B.S. (ENVIRONMENTAL SCIENCE)
இந்த www.iisc.ernet.in/ug இணையதளத்திற்க்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க ரூ.400
விண்ணப்பிக்க கடைசி தேதி : மார்ச் 25
இது மத்திய அரசின் நிறுவனம் எனவே முஸ்லீம்களையும் சேர்த்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 % இட ஒதுக்கீடு உள்ளது. இங்கு படிக்கும் முஸ்லீம் மாணவர்களுக்காக சிறப்பு கல்வி உதவி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது.
மேலும் விபரங்கள் இந்த www.iisc.ernet.in/ug இணையதளத்தில் உள்ளது.

No comments:

Post a Comment