ம.ம.கட்சியினர் மானம் காத்த லட்சணம்:
தற்போது சமுதாயத்தின் மானத்தை நாங்கள் காக்கப் போகிறோம் என்று கிளம்பியுள்ள ம.ம.கட்சியினர் தி.மு.க கூட்டணியிலிருந்த போது எந்த அளவிற்கு மானம் காத்தார்கள் என்பதனை தேர்தல் நெருங்கி வரும் இவ்வேளையில் நினைவு கூர்ந்தால் நன்றாக இருக்கும் என்ற நோக்கத்தில் உணர்வு வாசகன் என்ற முறையில் ம.ம.கட்சியினர் மானம் காத்த (?) சில நிகழ்வுகளை இங்கு பதிவு செய்கின்றேன்.
தங்களது மானத்தையே இவர்கள் காக்க வக்கில்லை; இவர்கள் சமுதாய மானம் காப்பது என்பது எப்படி?:
இவர்கள் சமுதாயத்தின் மானத்தை காப்பது இருக்கட்டும், தி.மு.க கூட்டணியிருந்த போது தங்களது மானத்தையாவது காத்துக் கொண்டிருந்தார்களா? என்று நாம் ஆய்வு செய்தால் இவர்களது மானமே கப்பலில் அல்ல; ஏரோப்பிளேனில் ஏறி பறந்து கொண்டிருந்தது என்று தான் நாம் சொல்ல வேண்டும்.
காரணமென்னவென்றால், இவர்கள் அந்தக் கூட்டணியில் இருந்த போது எந்த அளவிற்கு தங்களது மானத்தை இழந்து நின்றார்கள் என்று நாம் அறிந்து கொண்டால், தக்களது மானத்தையே காக்க துப்பில்லாதவர்கள் எப்படி சமுதாயத்தின் மானத்தை காப்பார்கள் என்பதை சிந்தனை திறன் கொண்ட ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளலாம்.
சிறுநீர்கழிக்க சென்ற கலைஞருக்கு எழுந்து எழுந்து நின்று வணக்கம் செலுத்தி மானம் காத்தது:
திண்டுக்கல்லில் நடைபெற்ற தி.மு.க மாநாட்டின் போது மேடையில் அமர்ந்திருந்த கலைஞர் நீரழிவு நோயால் அவதிப்பட்டார். எனவே அடிக்கடி சிறுநீர்கழிக்க அவர் எழுந்து சென்ற போதெல்லாம், மானம் காக்க புறப்பட்ட ம.ம.க வின் ஒருங்கிணைப்பாளர் கலைஞர் சிறுநீர் கழிக்க சென்ற போதெல்லாம் எழுந்து எழுந்து அமர்ந்து கூழைக் கும்பிடு போட்டு மானம் காத்த லட்சணத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து மானம் காத்தது:
அத்தோடு மட்டுமில்லாமல், சென்ற பாராளுமன்றத் தேர்தலில் இவர்களுக்கு சீட்டு இல்லை என்று திமுக தரப்பு இவர்களை விரட்டியடித்தது. திமுக தரப்பு இவர்களை விரட்டியது பற்றி இவர்களது அதிகாரப்பூர்வ ஏட்டில் ஒரு சகோதரர் கேள்வியெழுப்பினார். அவர் எழுப்பிய கேள்வியையும் அதற்கு அவர்கள் அளித்த பதிலையும் அப்படியே கீழே தருகின்றோம்.
அதை ஒரு முறை படித்து நன்கு சிந்தித்துப் பார்த்தீர்களேயானால் இவர்கள் திமுக வோடு இருந்த போது மானம் காத்தார்களா? அல்லது மானம் கெட்டு பதவி சுகத்திற்காக கேடுகெட்டு இருந்தார்களா? என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
கேள்வி: பல்லாவரத்தில் நடந்த ம.ம.க. கூட்டத்தில் கலைஞரையும், திமுகவையும் தாக்கிப் பேசியதால் தாங்கள் கூட்டணியிலிருந்து கழற்றி விடப்பட்டதாக திமுகவினர் கூறுகிறார்களே…?
பதில்: முற்றிலும் தவறான செய்தி. நமது தலைமை நிர்வாகிகள் பேசும் பொதுக்கூட்டங்கள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்படுகின்றன. அதை யாருக்கு வேண்டுமானாலும் போட்டுக் காண்பிக்கிறோம். அப்படி பேசியதாக கூறுபவர்கள் அதனை நிரூபிக்கட்டும். இது போன்ற பொய்யான செய்திகளைக் கூறி, நம்மை வெளியே அனுப்பியதற்கு திமுக தரப்பு காரணங்களை கற்பிக்க முயல்கிறது. அவ்வளவு தான்.\
ம.ம.க வினரிடத்தில் கேட்கப்பட்ட கேள்வியையும் அதற்கு அவர்கள் அளித்த மானம் கெட்ட பதிலையும் ஒன்றுக்கு பல முறை படித்துப் பாருங்கள். இவர்கள் திமுக வீசி எறிந்த எலும்புத் துண்டுகளை வாங்கிக் கொண்டு இத்தனை வருடங்கள் நாங்கள் வாலாட்டிக் கொண்டல்லவா? இருந்து வந்தோம். ஒரு போதும் நாங்கள் அவர்களை விமர்சித்ததில்லையே; தாக்கிப் பேசியதில்லையே. அப்படி தாக்கிப் பேசியனால் அதை நிரூபிக்கத் தயாரா? நிரூபிக்க முடியுமா? என்று சவால் விடுகின்றார்கள் என்றால் இவர்கள் தங்களது சுயநலனுக்காக சமுதாயத்தின் மானத்தை மட்டுமல்ல; தங்களது மானத்தையும் அடகு வைக்க துணிய மாட்டார்கள் என்று தெளிவாகின்றது.
மேலும் கூட்டணியில் இருந்து மானம் காப்பதற்காக நாங்கள் வெளியேறவில்லை. மாறாக திமுக தான் எங்களை வெளியேற்றியது; கழுத்தைப் பிடித்து தள்ளியது என்பதையும் மேலே கண்ட பதில் மூலம் ஒப்புக் கொண்டனர்.
மேலும் கூட்டணியில் இருந்து மானம் காப்பதற்காக நாங்கள் வெளியேறவில்லை. மாறாக திமுக தான் எங்களை வெளியேற்றியது; கழுத்தைப் பிடித்து தள்ளியது என்பதையும் மேலே கண்ட பதில் மூலம் ஒப்புக் கொண்டனர்.
இடஒதுக்கீடு துரோகத்தை ஆதரித்து மானம் காத்தது:
நாங்கள் தான் ரோஸ்டர் – பூஸ்டர் என்று இடஒதுக்கீட்டில் துரோகம் நடந்த போது கூட திமுக வை விமர்சிக்காமல் மானமிழந்தவர்களாச்சே! அந்த துரோகத்தை கலைஞரே ஒப்புக் கொண்டு; அதிகாரிகள் துரோகமிழைத்து விட்டனர் அந்த துரோகத்தை நான் சரிசெய்கிறேன் என்று ஒப்புக் கொண்ட போது கூட, அதாவது கலைஞரே தவறை ஒப்புக் கொண்ட போதும், இல்லை இல்லை கலைஞர் தவறு செய்யவில்லை என்று அவருக்கு முட்டுக் கொடுத்துள்ளார்கள் என்றால் மானம் காத்த மகிமையை எடை போட்டுக் கொள்ளுங்கள். அப்போதே விமர்சிக்காதவர்கள் இப்போதா விமர்சிக்க போகிறோம் என்று சவால் விடுகின்ற அளவுக்கு மானம் கெட்டு இருந்துள்ளார்கள் என்றால் இவர்களது மானம் காக்கும் லட்சணத்தை நாமே எடை போட்டு பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.
102 தொகுதிகளில் தங்களது பலத்தைக் காட்டி மானம் காப்பார்களா?
சென்ற பாராளுமன்றத் தேர்தலில் திமுக இவர்களை தங்களது கூட்டணியிலிருந்து கழற்றி விட்டவுடன் இவர்கள் கூறிய வாசகங்கள் இதோ!
ம.ம.க.வுக்கு துரோகம் செய்ததற்கான பலனை குறைந்தது 17 தொகுதிகளில் திமுக- காங்கிரஸ் கூட்டணி சந்திக்கப் போகிறது என்பதை மே 13 தேர்தல் விரைவில் உணர்த்தும். கலைஞரை அந்த முடிவு திருத்தும்!
அதாவது இவர்களது ஆதரவு இல்லாவிட்டால் 17பாராளுமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணி தோற்குமாம். அப்படி திமுக கூட்டணியை 17 பாராளுமன்ற தொகுதிகளில் தோற்கடித்து சமுதாய மானம் காப்பார்களாம்,
இப்போது நமது சட்டமன்ற தொகுதி கணக்கிற்கு வருவோம்.
ஒரு பாராளுமன்ற தொகுதி = ஆறு சட்டமன்ற தொகுதிகள்.
அதாவது ஆறு சட்டமன்ற தொகுதிகள் இணைந்தது தான் ஒரு பாராளுமன்ற தொகுதி.
அப்படியானால், இவர்கள் தி.மு.க விடம் சவால் விட்ட பிரகாரம் இவர்களது அசுர பலத்தை 17பாராளுமன்ற தொகுதிகளில் நிரூபிக்கலாம்.
அப்படியானால்,
அப்படியானால், இவர்கள் தி.மு.க விடம் சவால் விட்ட பிரகாரம் இவர்களது அசுர பலத்தை 17பாராளுமன்ற தொகுதிகளில் நிரூபிக்கலாம்.
அப்படியானால்,
17பாராளுமன்ற தொகுதி X ஆறு சட்டமன்ற தொகுதிகள் = 102 சட்டமன்ற தொகுதிகள்.
ஆக 102 சட்டமன்ற தொகுதிகளில் இவர்கள் போட்டியிடுவார்களேயானால் இவர்களே அவை அனைத்திலும் வெற்றிபெற்று தமிழக முதல்வர் அரியணையில் ஏறி அமர்ந்துவிடலாம். அதைவிட்டு விட்டு அதிமுக விடம் போய் 18 தொகுதிகளுக்காக இவர்கள் கெஞ்சிக் கொண்டு இருப்பது நமது சமுதாயத்திற்குப் பெரும் இழுக்கு. எனவே இவர்கள் தனித்து 102 தொகுதிகளில் போட்டியிட்டு முதல்வர் நாற்காலியில் அமர்ந்து நமது சமுதாயத்தின் மானத்தைக் காக்க வேண்டும். காப்பார்களா?
குறிப்பு:
இந்தக் கட்டுரையை வாசிக்கக்கூடிய சகோதர சகோதரிகள் தயவுசெய்து சிரிக்க வேண்டாம்.
இந்தக் கட்டுரையை வாசிக்கக்கூடிய சகோதர சகோதரிகள் தயவுசெய்து சிரிக்க வேண்டாம்.
உணர்வு வாசகர் மன்றம்
No comments:
Post a Comment