Friday 15 April 2011

ஈமானை இழந்த ம.ம.கட்சி



மேற்கண்ட தமுமுக வின் அறிவிப்பு பலகையில் எழுதி இருக்கும் வாசகங்கள் என்னவென்று தெரிகின்றதா?
கடலூர் மாவட்ட ஆயங்குடி தமுமுக அறிவிப்பு பலகையில், மவ்லூது ஓதுவதி தப்ரூக் வழங்கப்படும் வாழைப்பழம் மற்றும் லட்டு, பூந்தி, ஜிலேபி போன்ற பொருட்களுக்கு இந்த ஆண்டு ஒரு தலைக்கட்டிற்கு ரூபாய் 250 நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அதை ம.ம.கட்சி தலைவர் புர்ஹானுதீனிடம் ஒப்படைக்குமாறும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதை தான் நீங்கள் மேலே உள்ள அறிவிப்பில் பார்க்கின்றீர்கள்.
இவர்கள் தேர்தலில் சீட்டுகேட்டு 3 தொகுதி பெற்று மானம் இழந்து நிற்பது ஒருபுறமிருக்க, மானத்தை இழந்தது போல, தற்போது ஈமானையும் இழந்து நிற்கின்றனர்.
இறைவனுக்கு இணைகற்பிக்கும் மவ்லூது பாடல்கள் பாடப்பெற்று அதற்கு பிறகு வழங்கப்படும் தப்ரூக்கிற்கு வசூல் செய்து தீமைக்கு ஒத்துழைப்புக்கொடுத்து ஈமானை இழக்கும் நிலைக்கு இவர்கள் ஆளாகியுள்ளனர்.
இவர்களுக்கு நபிகளாரின் ஒரு எச்சரிக்கையை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்கு முந்தைய சமுதாயத்தார் மத்தியில் அல்லாஹ் அனுப்பிய ஒவ்வோர் இறைத் தூதருக்கும் அவருடைய சமுதாயத்திலேயே சிறப்பு உதவியாளர்களும் நண்பர்களும் இல்லாமல் இருந்ததில்லை. அவர்கள் அந்த இறைத்தூதரின் வழிமுறையைக் கடைப்பிடிப் பார்கள்; அவரது உத்தரவைப் பின்பற்றி நடப்பார்கள். அந்தத் தோழர்களுக்குப் பிறகு சிலர் வருவார்கள். அவர்கள் தாம் செய்யாதவற்றைச் சொல்வார்கள். தமக்குக் கட்டளையிடப்படாத வற்றைச் செய்வார்கள். ஆகவே, யார் இ(த்தகைய)வர்களுடன் தமது கரத்தால் போராடுவாரோ அவர் இறைநம்பிக்கையாளர் ஆவார். யார் இவர்களுடன் தமது நாவால் போராடுவாரோ அவரும் இறைநம்பிக்கையாளர் ஆவார். யார் இவர்களுடன் தமது உள்ளத்தால் போராடுவாரோ அவரும் இறைநம்பிக்கையாளர்தாம். இவற்றுக்கப்பால் இறைநம்பிக்கை என்பது கடுகளவுகூட கிடையாது
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
முஸ்லிம் – 80
ஒரு தீமையைக்காணும்போது அதை கையால் தடுக்கமலோ, அல்லது நாவால் தடுக்காமலோ, அல்லது குறைந்தபட்சம் மனதாலாவது வெறுத்து ஒதுக்காமலோ யார் இருக்கிறாரோ அவருடைய உள்ளத்தில் ஈமான் என்பது கடுகளவுகூட இல்லை என நபிகளார் எச்சரித்திருக்க, இவர்கள் மவ்லூது என்ற அப்பட்டமான இணைவைத்தலுக்கு ஆதரவாக தப்ரூக் என்னும் சீரணி வாங்கித்தர தங்களது நிர்வாகிகளே களமிறங்கி. தங்களது அறிவிப்பு பலகையிலேயே அறிவிப்பு வெளியிடுகிறார்கள் என்றால் இவர்களுடைய ஈமானின் தரத்தை இந்த நபி மொழியிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
இந்த ம.ம.கட்சியின் நிர்வாகியிடத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது தவ்ஹீத் காரர்கள் இருந்ததால்தான் தங்களது இயக்கம் வளரவில்லை எனவும், அவர்களை துரத்தியடித்த பிறகுதான் தங்களது இயக்கம் அசூர வளர்ச்சிகண்டதாகவும் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். மவ்லூது ஓத தப்ரூக் வழங்குவதற்கு பணம் வசூலித்து தருபவருடைய கருத்து இதுவாகவல்லாமல் வேறு என்னவாக இருக்கும்? அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

விடுமுறையை பயனுள்ளதாக மாற்றுவோம்


10 -ஆம் வகுப்பு மற்றும் 12 – ஆம் வகுப்பு தேர்வுகள் முடிந்துவிட்டது. மாணவர்களும், பெற்றோர்களும் நிம்மதி பெருமூச்சுடன் தேர்வுக் முடிவுகளை எதிர்பாத்த வண்ணம் இருக்கின்றனர். இடையில் 6 முதல் 10 வாரம் வரை மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாள்களை எதிர்காலத்தில் தமது கல்வி அறிவு சிறக்க பயன்படும் வகையில் மாணவர்கள் பயன்படுத்த வேண்டும்.
விடுமுறை நாள்களின் என்ன பண்ணலாம்?
1. ஆங்கில மொழிதிறனை (English language skill) வளர்த்துகொள்ள முயற்சிக்கவும் : ஆங்கில மொழிதிறன் என்பது இன்று இன்றியமையாத ஒன்றாக உள்ளது. தமிழ் வழி கல்வி பயின்ற மாணவர்கள் ஆங்கில பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படிக்கலாம் அல்லது வீட்டில் இருந்தே ஆங்கில மொழி பயிற்சி புத்தகங்களை படிக்கலாம். ஆங்கில திறனை வளர்த்து கொள்ள மிக சிறந்த வழி ஆங்கில குர்ஆனை தமிழ் குர்ஆனுடன் ஒப்பிட்டு வாசிப்பது. குர்ஆனை, வசனத்திற்க்கு வசனம் ஆங்கிலத்திலும் தமிழிலும் படிப்பதின் மூலம் ஆங்கில அறிவும் வளரும், அல்லாஹ்வுடைய கட்டளைகளையும் அறிந்து கொள்ளமுடியும்.
2. தொடர்பு திறனை (Communication skill) வளர்ப்பது : வேலைவாய்ப்பு பெற மிக முக்கிய தகுதியாக கருதபடுவது தொடர்பு திறன் எனப்படும் Communication skill. என்னதான் மதிப்பெண் வாங்கி இருந்தாலும் Communication skill இல்லாவிட்டால் எந்த நிறுவனத்திலும் வேலைக்கு எடுக்க மாட்டார்கள். இந்த தொடர்பு திறன் Communication skill -யை வளர்த்து கொள்ள மிக முக்கிய தேவை தைரியம், தைரியமாக நீங்கள் நினைக்கும் கருத்துக்களை பிறருக்கு சொல்ல பழகுங்கள். அதாவது இஸ்லாமிய ரீதியில் சொல்வதாக இருந்தால் நல்ல தாயிகளாக ( பிரசாரகர்களாக) மாற பழகுங்கள். Communication skill என்பது ஒவ்வொறு முஸ்லீமிடமும் கட்டாயம் இருக்கவேண்டிய பண்பாகும்.
“நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.” (குர்ஆன் 3 : 104)
தினமும் குர் ஆனை எடுத்து தொழுகைக்கு பிறகு வீட்டில் உள்ளவர்காளுக்கு படித்துகாட்டுங்கள், முடிந்தவரை பிறருக்கு எடுத்து சொல்லுங்கள், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல பழகுங்கள். குர் ஆனுடைய கருத்துகளை பிறருக்கு சொல்வதற்க்கு வெட்க படாதீர்கள், தைரியமாக சொல்லுங்கள். இப்படி தொடர்சியாக செய்வதன் மூலம் நம்முடைய Communication skill – யை வளர்த்து கொள்ள முடியும்.
கணினி அறிவை (Computer knowledge ) வளர்த்து கொள்ளுங்கள் : தற்போது பள்ளிபடிப்பு படிக்கவே கணினி அறிவு (Computer knowledge)அவசியமாகின்றது, எனவே கணினியில் குறிப்பாக MS Office (Word, Excel, Power Point etc..)கற்றுகொள்ளுங்கள். மேலும் internet-ன் பயன்பாட்டையும் கற்றுகொள்ளுங்கள், குறிப்பாக மின் அஞ்சல் (E -mail) துவங்குவது, google Search, விக்கீபீடியா போன்றவைகளை அறிந்துகொள்ளுங்கள், இன்டெர்னெட் பயன்படுத்தும் போது பெற்றோர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும், இணையதளத்தில் நல்ல வியஷயங்களுக்கு இணையாக கெட்ட விஷயங்களும் கொட்டிகிடக்கின்றது. தற்போதுள்ள காலத்தில் இன்டெர்னெட்டே வேண்டாம் என ஒரேடியாக ஒதுக்கிவிட முடியாது, எனவே பெற்றொர்கள்தான் மாணவர்களை இன்டெர்னெட்டை சரியான முறையில் பயன்படுத்த பழக்க படுத்த வேண்டும்
10 மற்றும் +2 – ஆம் வகுப்பு படிக்க போகும் மாணவர்களுக்கு : விடுமுறையை வீணாகாமல் இப்போதே பொது தேர்விற்க்கு படிக்க ஆரம்பித்து விடுங்கள். 9 – ஆம் வகுப்பு முடித்து 10 – ஆம் வகுப்பு செல்லும் மாணவர்கள் 10 – ஆம் வகுப்பு பொது தேர்விற்க்கும். +1 முடித்து +2 செல்லும் மாணவர்கள் +2 வகுப்பு பொது தேர்விற்க்கு தயாராகுங்கள். +2 ஆம் வகுப்பு படிக்க போகும் மாணவர்கள் தேசிய அளவில் மருத்துவம் பொறியியல் படிக்க நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகுங்கள்.
+2 – ஆம் வகுப்பு படிக்க போகும் மாணவர்களுக்கான போட்டி தேர்வுகள் :
IIT-JEE – இந்த தேர்வு IIT, IISc – ல் B.E/B.Tech/B.Arch படிக்க நடத்தபடும் தேர்வாகும், +2 – ல் கணிதம், இயற்பியல், வேதியியல் படிக்கும் மாணவர்கள் எழுதலாம்.
AIEEE – NIT மற்றும் மத்திய பல்கலை கழகங்களில் B.E/B.Tech/B.Arch படிக்க நடத்தபடும் தேர்வாகும், +2 – ல் கணிதம், இயற்பியல், வேதியியல் படிக்கும் மாணவர்கள் எழுதலாம்.
AIPMT – மத்திய அரசின் மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் MBBS படிக்க நடத்தபடும் தேர்வு, உயிரியல் அல்லது விலங்கியல், தாவரவியல் மற்றும் இயற்பியல் , வேதியியல் படிக்கும் மாணவர்கள் எழுதலாம்.
HSEE – IIT -யில் ஒருங்கினைத்த 5 ஆண்டு M.A. படிப்பிற்க்கான தேர்வு. அனைத்து பிரிவு மாணவர்களும் எழுதலாம், குறிப்பாக Arts குரூப் படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வின் மூலம் IIT-யில் படிக்கலாம்
மாணவர்களே! நேரத்தை வீணாகாமல் இப்போதே போட்டி தேர்வுகளுக்கும் , பொது தேர்வுகளுக்கும் தயாராகுங்கள். தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள், எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க நம்மோடு அல்லாஹ் இருகின்றான், அல்லாஹ்விம் மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுத்தி கேளுங்கள், கடினமாக உழைத்து படியுங்கள் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்.

Friday 1 April 2011

பழைய வண்ணராப்பேட்டையில் மக்களை வழி கேடுக்கும் செயல்

01.04.2011 அன்று இரவு 8 மணிக்கு பழைய வண்ணராப்பேட்டை சஜ்ஜா முனுசாமி 3 வது தெருவில் அப்துல் காதர் ஜெய்லாணி என்ற பெயரில் ஊரூஸ் இஸ்லாத்தில் இல்லாத ஒன்று நடைப்பெற்றது.

ஒவ்வொரு புதுமையும் வழிகேடு. ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும் என நபி நாயகம் ( ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பார் : இப்னு அப்பாஸ் (ரலி).  புஹாரி : 3445.