தினத்தந்தியில் இன்று (27-3-11) வெளியான செய்தி:
இடஒதுக்கீட்டை அதிகரிப்பதாக உறுதி அளித்ததால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தி.மு.க.வுக்கு ஆதரவு
கருணாநிதியை சந்தித்து தெரிவித்தனர்.
இடஒதுக்கீட்டை அதிகரிப்பதாக உறுதி அளித்ததால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தி.மு.க.வுக்கு ஆதரவு
கருணாநிதியை சந்தித்து தெரிவித்தனர்.
முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரித்து தருவதாக உறுதியளித்தும்ளதால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தும்ளது.
தி.மு.க.வுக்கு ஆதரவு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் ஜெய்னுலாபுதீன், பொதுச் செயலாளர் ரஹமதுல்லா, செயலாளர் சாதிக் உம்பட நிர்வாகிகம் நேற்று அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்துக்கொண்டனர்.
பின்னர் வெளியில் வந்த ஜெய்னுலாபுதீன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கல்வி, வேலைவாய்ப்பில் அடித்தட்டு முஸ்லிம்கம் முன்னேற வேண்டுமானால் தனி இடஒதுக்கீடு தேவை என்ற அடிப்படையில் 3.5 சதவீத இடஒதுக்கீட்டை இந்த ஆட்சியில் பெற்றோம்.
இடஒதுக்கீட்டை அதிகரிக்க
இது போதுமானதாக இல்லை என்று கருதியதால் இந்த 3.5 சதவீத இடஒதுக்கீட்டை யார் அதிகரித்து தருவோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறுகிறார்களோ அவர்களை ஆதரிப்பது என்ற நிலையில் இருந்தோம்.
அ.தி.மு.க. தலைமை எங்களை 5 முறை தொடர்பு கொண்டு இடஒதுக்கீட்டை அதிகரித்து தருவோம் என்றனர். எங்கம் அலுவலகத்திற்கு வந்த அ.தி.மு.க. நிர்வாகிகளிடமும் தேர்தல் அறிக்கையில் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
தி.மு.க. அறிவிப்பு
ஆனால் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இந்த இடஒதுக்கீட்டை அதிகரித்து தருவதாக அறிவித்திருக்கிறார்கம். அ.தி.மு.க. கூறாமல் சென்றுவிட்டது. தேர்தல் அறிக்கையில் கூறாமல் பிரசாரங்களில் கூறுவதை நாங்கம் உறுதியாக எடுத்துக்கொம்ள முடியாது.
அதன் அடிப்படையில், ஒட்டுமொத்த முஸ்லிம்களின் கோரிக்கை அடிப்படையில் தி.மு.க.வை ஆதரிப்பது என்று எங்கம் மாநில பொதுக்குழுவில் முடிவெடுத்திருந்தோம். அந்த முடிவினை முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து தெரிவித்தோம். பொதுக்குழுவில் எடுத்த முடிவுப்படி முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு தரவேண்டும் என்றும் நாங்கம் அவரிடம் கூறியிருக்கிறோம்.
இவ்வாறு ஜெய்னுலாபுதீன் கூறினார்.
No comments:
Post a Comment